பந்தி விட்டெழுந்திருந்தார் பரம என் ராஜா பன்னிரு சீடர்களுக்கும் பணிவிடை செய்யவென்று 1. வஸ்திரம் கழற்றி வைத்து மறு சீலை எடுத்து அரையிலே கட்டிக் கொண்டு அவர் செய்த செய்கைகளும். 2. பாத்திரத்தில் தண்ணீர் மொண்டு சீஷரண்டை வந்தாரே சீஷரின் கால்களையும் சீக்கிரம் கழுவினாரே. 3. கட்டியிருந்த தமது சீலையாலே துடைத்தார் கடந்து பேதுருவின் கால்களைக் கழுவ வந்தார். 4. கால்களைக் கழுவலாமா கர்த்தன் யேசுவே நீர்? என்று பேதுரு உரைக்க யேசு மறுமொழியாக 5. நான் செய்கிற தின்னதென்று இப்போது நீ அறியாய் இனி அவைகளை ஒவ்வொன்றாய் அறிந்து கொள்வாய். 6. நித்தம் நித்தம் துதியேற்கும் நிமலன் நம் யேசுவே! நீர் எந்தன் கால்களை ஒருபோதும் கழுவ வேண்டாம். 7. நானுன்னைக் கழுவாவிட்டால் அருமைப் பேதுருவே! என்னிடத்தில் பங்குமில்லை என்று யேசு பகர்ந்தாரே.

Comments
Post a Comment