1. அடைக்கலம் ஆண்ட வரே அடைக்கலம் ஆண்டவரே - எங்கள் அடைக்கலம் வேறில்லையே - எம்மைப் படைத்துக் காத்து மீட்டுக் கொண்டவர் எங்கள் பரமபிதா நீரே. 2. பரம சுதந்திரமே -- எங்கள் பாத்திரத்தின் பாகமே - உந்தன் கரமே அருளும் வரமே கர்த்தா நின் கிருபையின் மா செல்வமே. 3. ஆலோசனை கர்த்தரே - எங்கள் ஆவியான துாயரே - இந்தப் பூலோகத்தில் போதம் அளித்திடும் புனித சகாயர் நீரே. 4. ஆறுதல் அளிப்பவரே - உமை அண்டிப்பிழைப்போ ரெமை - சதா ஆற்றித்தேற்றி மாற்றி ஆட்கொண்டவர் மாறாத பூரணரே.